தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 27 March 2022 3:04 AM IST (Updated: 27 March 2022 3:04 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சீனிவாசா நகரைச் சேர்ந்தவர் முபாரக்(வயது 41). கூலித்தொழிலாளியான இவர் ஆண்டிமடம் அருகே உள்ள பெரியாத்துக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த வேலன் என்பவரது மகள் மஞ்சுளாதேவியை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து செய்துகொண்டார். இவர்களுக்கு சாரு என்ற மகளும், பைசல் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் முபாரக் திருட்டில் ஈடுபட்டதாகவும், இதனால் மஞ்சுளாதேவி கோபித்துக்கொண்டு திருப்பூர் சென்று வேலை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனது தாய் வீட்டில் இருந்த மஞ்சுளாதேவியுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து முபாரக் பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்துள்ளார். இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முபாரக் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து முபாரக்கின் தாய் பிபி ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story