சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு


சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
x
தினத்தந்தி 27 March 2022 3:04 AM IST (Updated: 27 March 2022 3:04 AM IST)
t-max-icont-min-icon

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இணைய குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா வழிகாட்டலின்படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமேனி அறிவுரைப்படி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இணைய குற்றங்கள் எவ்வாறு நடக்கிறது? இந்த இணைய குற்றங்களில் இருந்து எவ்வாறு எச்சரிக்கையாக இருப்பது என்பது குறித்தும், மேலும் இணையதளத்தில் குற்றவாளிகள் மூலம் பண இழப்பு ஏதும் ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930-ல் உடனடியாக தகவல் அளிப்பது குறித்தும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் எவ்வாறு புகார் செய்வது என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் மற்றும் விக்கிரமங்கலம் போலீசார் கலந்து கொண்டனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் அறிவழகன் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story