நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி குத்திக்கொலை; காவலாளி கைது


நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி குத்திக்கொலை; காவலாளி கைது
x
தினத்தந்தி 27 March 2022 3:12 AM IST (Updated: 27 March 2022 3:12 AM IST)
t-max-icont-min-icon

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை குத்திக்கொன்ற காவலாளி கைது செய்யப்பட்டார்

பெங்களூரு: நேபாளத்தை சேர்ந்தவர் தேஜ்பகதூர்(வயது 48). இவரது மனைவி கமலாதேவி(40). இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். தேஜ்பகதூர் தனது மனைவி, பிள்ளைகளுடன் பெங்களூரு ராமமூர்த்திநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சன்னசந்திராவில் வசித்தார். மேலும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தேஜ்பகதூர் காவலாளியாகவும் பணியாற்றி வந்தார். 

இந்த நிலையில் கமலாதேவி தனது செல்போனில் அடிக்கடி யாரிடமோ பேசியதாக தெரிகிறது. இதனால் கமலாதேவியின் நடத்தையில் தேஜ்பகதூருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக நேற்று முன்தினம் இரவு 2 பேருக்கும் இடையே சண்டை உண்டானது. அப்போது கமலாதேவியை, தேஜ்பகதூர் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த கமலாதேவி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராமமூர்த்திநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேஜ்பகதூரை கைது செய்தன

Next Story