நெல்லை-தென்காசி இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தீர்மானம்


நெல்லை-தென்காசி இடையே  4 வழிச்சாலை அமைக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தீர்மானம்
x
தினத்தந்தி 27 March 2022 4:29 AM IST (Updated: 27 March 2022 4:29 AM IST)
t-max-icont-min-icon

4 வழிச்சாலை அமைக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தீர்மானம்

பாவூர்சத்திரம்:
நெல்லை-தென்காசி இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இணையும் விழா
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையுடன் இணைந்திருந்த நெல்லை, தென்காசி மாவட்ட வர்த்தக கழகமானது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் இணையும் விழா, பாவூர்சத்திரத்தில் உள்ள வணிகர்கள் சங்க வளாகத்தில் நேற்று மாலையில் நடைபெற்றது. நெல்லை மாவட்ட வர்த்தக கழக தலைவர் ஆர்.கே.காளிதாசன் தலைமை தாங்கினார். 
பேரமைப்பு தென்காசி மாவட்ட தலைவர் டி.பி.வி.வைகுண்டராஜா, நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் ஏ.செல்வராஜ், நெல்லை மாவட்ட வர்த்தக கழக செயலாளர் ஏ.ஜெ.எம்.சாலமோன், தென்காசி மாவட்ட செயலாளர் வி.கணேசன், கே.காஜா முகைதீன், ெநல்லை மாவட்ட வர்த்தக கழக பொருளாளர் என்.மீரான், தென்காசி மாவட்ட பொருளாளர் ஐ.வி.என்.கலைவாணன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பேச்சாளர் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார். வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-
4 வழிச்சாலை அமைக்கும் பணிகள்
திருச்சியில் வருகிற மே மாதம் 5-ந்தேதி நடைபெறவுள்ள 39-வது வணிகர் தினம் மற்றும் தமிழக வணிகர் விடியல் மாநாட்டில் முதன்ைம சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் நெல்லை, தூத்துக்குடி மண்டலங்களில் இருந்து 50 ஆயிரம் வணிகர்கள் திரளாக கலந்து கொள்வது.
நெல்லை- தென்காசி இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். நெல்லை-தென்காசி 4 வழிச்சாலையை பேட்டையிலிருந்து மதுரை-தூத்துக்குடி- நாகர்கோவில் 4 வழிச்சாலைகளுடன் இணைத்து, ரிங் ரோடு அமைக்க வேண்டும்.
இதேபோன்று தென்காசியில் நான்குவழிச்சாலையில் இருந்து செங்கோட்டை சாலைக்கு ரிங் ரோடு அமைக்க வேண்டும். நெல்லை-தென்காசி சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விழாவில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, மாநில செயலாளர் ராஜ்குமார், நெல்ைல மண்டல தலைவர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு விக்கிரமராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பழனி நாடார் எம்.எல்.ஏ., மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன், முன்னாள் யூனியன் தலைவர் எஸ்.கே.டி.பி.காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story