கடையம் அருகே சூறைக்காற்றில் வாழைகள் சேதம்


கடையம் அருகே சூறைக்காற்றில் வாழைகள் சேதம்
x
தினத்தந்தி 27 March 2022 6:26 AM IST (Updated: 27 March 2022 6:26 AM IST)
t-max-icont-min-icon

சூறைக்காற்றில் வாழைகள் சாய்ந்து சேதமடைந்தன

கடையம்:
கடையம் அருகே சம்பன்குளத்தை சேர்ந்தவர் பால். விவசாயி. இவர் சிவசைலம் வருவாய் கிராம பகுதி அரசுபத்தில் நிலத்தில் சுமார் ஒன்றரை ஏக்கர் அளவில் வாழைகள் பயிர் செய்திருந்தார். இந்தநிலையில் அந்த பகுதியில் வீசிய சூறைக்காற்றில் 500-க்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து சேதமடைந்தன. இதுபற்றி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து சேதம் அடைந்த வாழைகளுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயி பால் கேட்டுக்கொண்டார்.

Next Story