வாக்காளர் விழிப்புணர்வு போட்டிக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு
வாக்காளர் விழிப்புணர்வு போட்டிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை
வாக்காளர் விழிப்புணர்வு போட்டிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டி
இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக 2022-ம் ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ‘எனது வாக்கு எனது எதிர்காலம்-ஒரு வாக்கின் வலிமை’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டியை தொடங்கி உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் தேர்தல் நடைமுறையில் பங்கேற்க முறையான அறிவூட்டல் என்ற திட்டத்தின் மூலமாக மக்களின் திறமை மற்றும் படைப்பாற்றலை இப்போட்டியில் பங்கேற்க செய்வதின் வாயிலாக மக்களாட்சியில் முக்கியத்துவத்தை பறைசாற்றுகிறது. இதில் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம்.
மக்களாட்சியில் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது என்ற கருப்பொருளை மையமாக கொண்டு மக்களின் ஏராளமான படைப்புகளை வரவேற்கப்படுகிறது.
‘எனது வாக்கு எனது எதிர்காலம்-ஒரு வாக்கின் வலிமை’ என்ற மையக் கருத்தில் தேசிய அளவிலான போட்டியில் வினாடி-வினா போட்டி, வாசகம் எழுதும் போட்டி, பாட்டு போட்டி, காணொலி காட்சி உருவாக்கும் போட்டி மற்றும் விளம்பர படவடிவமைப்பு போட்டி என 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.
கால அவகாசம் நீட்டிப்பு
போட்டியில் பங்கேற்பாளர்கள் விரிவான வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை https://ecisveep.nic.in/contest/ என்ற வலைதளத்தில் பார்வையிடலாம். பங்கேற்பாளர்கள், போட்டிகள் தொடர்பான பதிவுகள் மற்றும் அதனுடைய விவரங்களை voter-contest@eci.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பங்கேற்பாளர்கள் தாங்கள் விண்ணப்பிக்க இருக்கும் போட்டியின் பெயர் மற்றும் பிரிவு ஆகியவற்றை மின்னஞ்சலின் பொருள் பகுதியில் தெளிவாக குறிப்பிட வேண்டும். போட்டிகளுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு 31-ந்தேதி (வியாழக்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்த போட்டியில் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு தரப்பு மக்களும் காலநீட்டிப்பினை பயன்படுத்தி பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும்.
இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story