10 மாதங்களாக மூடிக்கிடந்த திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரெயில்வே கேட் மீண்டும் திறப்பு


10 மாதங்களாக மூடிக்கிடந்த திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரெயில்வே கேட் மீண்டும் திறப்பு
x
தினத்தந்தி 27 March 2022 5:04 PM IST (Updated: 27 March 2022 5:04 PM IST)
t-max-icont-min-icon

10 மாதங்களாக மூடிக்கிடந்த திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரெயில்வே கேட் மீண்டும் கேட் திறக்கப்பட்டது.

திருவொற்றியூர் மேற்கில் அமைந்துள்ள ராஜாஜி நகர், கார்கில் நகர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் திருவொற்றியூர் பகுதிக்கு வந்து வெளி இடங்களுக்கு செல்ல அண்ணாமலை நகர் ரெயில்வே கேட்டை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், அந்த பகுதியில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட இருந்ததால் ரெயில்வே கேட் மூடப்பட்டது. சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பணிகள் தொடங்கப்படாமல் இருந்து வருகிறது.

இதனால் கடந்த 10 மாதங்களாக ரெயில்வே கேட் மூடி கிடந்தது. இதனால் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்று வருவதை தவிர்க்கும் விதமாக பொதுமக்கள் மற்றும் ரெயில்வே கேட்டை ஆபத்தான முறையில் கடந்து வந்தனர். இது குறித்து பொதுமக்கள் வார்டு கவுன்சிலர் கே.கார்த்திக்கிடம் முறையிட்டனர். அவர் பொதுமக்களின் கோரிக்கையை சென்னை கோட்ட ரெயில்வே அதிகாரிகளிடம் மனுவாக அனுப்பினார். இதையடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு வார்டு கவுன்சிலர் கே.கார்த்திக் முன்னாள் எம்.எல்.ஏ., கே.குப்பன்‌ முன்னிலையில் கேட் திறக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story