25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த தூத்துக்குடி போலீசாருக்கு பாராட்டு
தூத்துக்குடி மாவட்டத்தில் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 25 வருடங்கள் பணி நிறைவு செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார்.
வெள்ளி விழா
தூத்துக்குடி மாவட்டத்தில் 1997ம் ஆண்டு இரண்டாம் நிலைக் காவலர்களாக பணியில் சேர்ந்த 81 பேர் பதவி உயர்வுகள் பெற்று தற்போது ஏட்டாக பணியாற்றி நேற்று முன்தினம் 25 வருடங்கள் நிறைவு செய்து உள்ளனர். இதனை பாராட்டும் வகையில் வெள்ளிவிழா நிகழ்ச்சி புதுக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி போலீசாருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.
பாதுகாப்பு அரண்
அப்போது, போலீஸ் துறையில் 25 வருடம் சிறப்பாக பணியாற்றிய உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
போலீஸ் துறையின் பணியை புரிந்து கொண்டு முழு ஒத்துழைப்பு கொடுத்தது உங்கள் குடும்பத்தினர் தான்.
ஆகவே அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைiயும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதே போன்று நீங்கள் போலீஸ் துறையில் மென்மேலும் சிறப்பாக பணியாற்றி பொதுமக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கவேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் 25 ஆண்டுகள் பணியாற்றிய போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கற்பகவள்ளி தலைமையில் போலீசார் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story