சட்டவிரோதமாக மது விற்பனை: நன்னடத்தை உறுதிமொழியை மீறிய தம்பதிக்கு மீண்டும் சிறை


சட்டவிரோதமாக மது விற்பனை: நன்னடத்தை உறுதிமொழியை மீறிய தம்பதிக்கு மீண்டும் சிறை
x
தினத்தந்தி 27 March 2022 5:28 PM IST (Updated: 27 March 2022 5:28 PM IST)
t-max-icont-min-icon

சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதால், நன்னடத்தை உறுதிமொழியை மீறிய தம்பதிக்கு மீண்டும் சிறை தண்டனை விதித்து திருவல்லிக்கேணி துணை கமிஷனர் உத்தரவிட்டார்.

சென்னை பல்லவன் சாலை காந்தி நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 42). இவரது மனைவி மாலா (39). இவர்கள் 2 பேர் மீதும் கஞ்சா, அடிதடி, சட்டவிரோத மது விற்பனை உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள இவர்கள் இருவரும் திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பகலவன் முன்பு கடந்த ஆண்டு ஆஜராகி, ‘நாங்கள் திருந்தி வாழப்போகிறோம். இனி எந்தவித குற்றச்செயல்களிலும் ஈடுபட மாட்டோம்’ என்று நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம் எழுதி கொடுத்தனர். ஆனால் அவர்கள் 2 பேரும் மீண்டும் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதால், கடந்த 16-ந் தேதி கைது செய்யப்பட்டனர். 

இந்த நிலையில் உறுதிமொழி பிணையை மீறிய குற்றத்துக்காக மாலாவுக்கு 185 நாட்களும், சரவணனுக்கு 217 நாட்களும் ஜாமீனில் வெளியே வர முடியாத வகையில் சிறை தண்டனை விதித்து, செயல்முறை நடுவராகிய திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பகலவன் உத்தரவிட்டார்.


Next Story