தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 27 March 2022 6:03 PM IST (Updated: 27 March 2022 6:03 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி. பொதுமக்கள் குறைகள் பகுதி.

 கூடுதல் பஸ்கள் இயக்குவார்களா?
சோளிங்கர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் சோளிங்கரில் உள்ள பள்ளிகளுக்கு வந்து படித்துச் செல்கிறார்கள். பஸ்களில் காலை, மாலை நேரத்தில் மாணவ-மாணவிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. அவர்கள் பஸ் படியில் நின்றபடியும், தொங்கி கொண்டும் ஆபத்தான நிலையில் பயணம் செய்கிறார்கள். கிராமப்புற மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு காலை, மாலை நேரத்தில் கூடுதலாக ஒன்றிரண்டு அரசு பஸ்கள் விட்டால் வசதியாக இருக்கும். அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கலியமூர்த்தி, சோளிங்கர்.

சாலையில் ஆபத்தான பள்ளம்

பேரணாம்பட்டு நகருக்குள் நுழையும் இடத்தில் இருக்கும் பாலத்தின் முன்பகுதி சாலையில் உள்வாங்கி பள்ளமாக உள்ளது. இதை கவனிக்காமல் வரும் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே ஆபத்தான பள்ளத்தை நெடுஞ்சாலைத்துைற அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.
-துரை.அரவிந்தன், லாலாபேட்டை பேரணாம்பட்டு. 
(படம்) கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்
ராணிப்ேபட்டை மாவட்டம் அக்ராவரத்தை அடுத்த அண்ணாநகர் மேற்குமலைமேடு பகுதியில் உள்ள தெருவில் கழிவுநீர் கால்வாய் ஒரு மாதமாக தூர்வாரப்படவில்லை. அதில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி படையெடுக்கின்றன. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குபேந்திரன், அக்ராவரம்.

பள்ளத்தை முறையாக வேண்டும்

வேலூர் மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை பணி நடந்து வருகிறது. பல இடங்களில் தெருக்களில் பள்ளம் தோண்டினார்கள். ஆனால் அந்தப் பள்ளத்தைப் பெயரளவுக்கு மண்போட்டு மூடுகிறார்கள். அந்த வழியாக கனரக வாகனங்கள் வரும்போது, திடீரெனச் சக்கரங்கள் மண்ணுக்குள் அழுந்தி விடுகின்றன. அதேபோல் நேற்று காலை 7.30 மணியளவில் வேலூர் சாய்நாதபுரம் ஆர்.வி.நகர் பகுதியில் 1-வது குறுக்கு தெரு வழியாக வந்த ஒரு லாரி பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டு சரியாக மூடாத பள்ளத்தில் மண்ணுக்குள் சக்கரம் அழுந்தி நிற்கிறது. இதனால் அந்த வழியாக எந்தவொரு வாகனமும் செல்ல முடியவில்ைல. எனவே பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்படும் பள்ளத்தை அதிகாரிகள் முறையாக மூட வேண்டும்.
-விஜய், வேலூர்.

தூர்ந்துபோய் கிடக்கும் கால்வாய்

தண்டராம்பட்டு தாலுகா சாத்தனூர் அணை மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அணையில் இருந்து 40 ஏரிகளுக்கு செல்லும் கால்வாய் முழுவதும் தூர்ந்து கிடைக்கிறது. இதனால் ஏரிகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் ஏரிகளுக்கு செல்லும் கிளை கால்வாய்கள் அனைத்தும் சேதமான நிலையில் உள்ளது. ஷட்டர்கள் அனைத்தும் சேதமாகி கிடக்கிறது. எனவே கால்வாய் வழியாக வரும் தண்ணீர் கடைமடைக்கு சென்று வருவது மட்டுமல்லாமல் சேதமான கால்வாய், ஷட்டர்கள் ஆகியவற்றை அதிகாரிகள் சீரமைத்துத் தர வேண்டும்.
-சிவக்குமார், தண்டராம்பட்டு. 

 கழிவுநீர் கால்வாய் கட்ட வேண்டும்

திருவண்ணாமலை மாவட்டம் இனாம்காரியந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்காய வேலூர் காலனியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். கழிவுநீர் கால்வாய் இல்லாததால் கிராமத்தில் பலர் வீடுகளில் இருந்து வெளியேற்றும் கழிவுநீரை தெரு சாலையிலேயே விடுகின்றனர். இதனால் அந்த வழியாக நடந்தும், வாகனங்களிலும் செல்ல சிரமமாக உள்ளது. அந்த வழியாக சுடுகாட்டுக்கு செல்லும் சாலையிலும் கழிவுநீரை வெளியேற்றுகின்றனர். பிணங்களை எடுத்துச் செல்ல சிரமமாக உள்ளது. நடந்து செல்வோர் வழக்கி விழும் அவலமும் ஏற்படுகிறது. எங்கள் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் கட்ட ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிகண்டன், இனாம்காரியந்தல்.



Next Story