நாமக்கல்லில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்
நாமக்கல்லில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நாமக்கல் பஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன் தலைமை தாங்கினார். கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. முன்னிலை வகித்தார். இதில் சுற்றலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
புகைப்பட கண்காட்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கிய நிகழ்வு, அரசு பள்ளிகளில் பயின்று தொழிற்படிப்புகளில் சேர 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டு, மாணவர்களுக்கு ஆணைகளை வழங்கிய நிகழ்வு, 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு ஆணை வழங்குவதின் தொடக்க விழா நிகழ்வு, நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இதில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலாநிதி, ஆணையாளர் சுதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்) கோகுல் உள்பட நகர்மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story