கடையின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு
கடையின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு
உடுமலை அருகே பாத்திரக்கடையின் பூட்டை உடைத்து, உள்ளே பீரோவில் வைத்திருந் 8 பவுன் நகைகளை திருடிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடையில் நகை திருட்டு
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
உடுமலையை அடுத்துள்ள பாலப்பட்டியைச் சேர்ந்தவர் கனகராஜ் இவர் தனது வீட்டிற்கு அருகில் கட்டிடத்தில் வாடகை பாத்திரக்கடை வைத்து நடத்தி வருகிறார்.இவர் நேற்றுமுன்தினம்
இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோது கடையின் கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு கடையில் பீரோவில் வைத்திருந்த ஆரம், செயின்கள், மோதிரம் உள்ளிட்ட 8 பவுன் தங்க நகைகளை காணவில்லை. இரவு நேரத்தில் யாரோ கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, பீரோவில் வைத்திருந்த நகைகளை திருடிச்சென்றுள்ளனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து கனகராஜ்உடுமலை போலீசில் புகார் செய்தார். இதையொட்டிஉடுமலை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.வி.சுஜாதா வழக்குப்பதிவு செய்து, நகைகளைத்திருடிச்சென்ற மர்மநபர்களை தேடிவருகிறார்.
Related Tags :
Next Story