தலைமறைவாக இருந்த 3 பேர் சிக்கினர்


தலைமறைவாக இருந்த 3 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 27 March 2022 7:49 PM IST (Updated: 27 March 2022 7:49 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தலைமறைவாக இருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் கோர்ட்டில் ஆஜராகாமல் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தீவிரமாக தேடிப்பிடித்து கைது செய்து வருகின்றனர். 
அதன்படி நேற்று தூத்துக்குடியை சேர்ந்த பாஸ்கர் என்ற வெடிகுண்டு பாஸ்கர் என்பவரையும், சுடலை மகன் பிரபு என்பவரையும் மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் கைது செய்தார். இதே போன்று முள்ளக்காடு சாமி நகர் பகுதியைச் சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் சதீஷ்பாண்டியன் (23) என்பவரை முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் கைது செய்தார்.


Next Story