குமாரபாளையத்தில் சாலை பாதுகாப்பு, மதுவிலக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
குமாரபாளையத்தில் சாலை பாதுகாப்பு, மதுவிலக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், ஈரோடு மாவட்ட போக்குவரத்து துணை ஆணையாளர் சுரேஷ் ஆகியோரின் ஆலோசனைப்படி குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் மதுவிலக்கு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பஸ் நிலையங்களில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலைக்குழுவினர் எமதர்மன் மற்றும் சித்திரகுப்தன் வேடமணிந்து வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், சாலை விதிகளை பின்பற்றுவது குறித்தும், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் குறித்தும் நடித்து காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அப்போது துண்டு பிரசுரங்களும் வாகன ஓட்டிகளிடம் வினியோகிக்கப்பட்டது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் மாதேஸ்வரன், மோட்டார் வாகன ஆய்வாளர் ரவிக்குமார், குமாரபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி மற்றும் டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story