கத்தியை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிள், பணம் பறிப்பு. வாலிபர் கைது


கத்தியை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிள், பணம் பறிப்பு. வாலிபர் கைது
x
தினத்தந்தி 27 March 2022 9:36 PM IST (Updated: 27 March 2022 9:36 PM IST)
t-max-icont-min-icon

கத்தியை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிள், பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்தவர் தரணிபிரபு (வயது 36), தொழிலாளி. இவர்  மோட்டார் சைக்கிளில் வேலூர் மூங்கில்மண்டி ஐங்ஷன் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி தரணிபிரபுவின் மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.1,000 ஆகியவற்றை பறித்து சென்றார். 

அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டார். அதில், அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரை சேர்ந்த பிரசாத்குமார் (26) பணம், மோட்டார்சைக்கிளை பறித்ததும், அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்றவழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. அதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பிரசாத்குமாரிடம் இருந்து மோட்டார்சைக்கிள், ரூ.1,000 மற்றும் கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story