ரூ.1 லட்சம் கொடிநாள் வசூல்
கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் சார்பில் ரூ.1 லட்சம் கொடிநாள் வசூல் செய்யப்பட்டது.
கீழ்பென்னாத்தூர்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்னாள் படைவீரர் நல அலுவலகம் சார்பில், கொடி நாள் வசூல் ரூ.1 லட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டிருந்தது. இந்த இலக்கை கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் எட்டியது. இதற்கான காசோலையை முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மு.பிரதாப், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் விஜயகுமாரிடம் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சம்பத், மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சிஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story