ஊட்டியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற மேலும் 3 கடைகளுக்கு சீல்


ஊட்டியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற மேலும் 3 கடைகளுக்கு சீல்
x
தினத்தந்தி 27 March 2022 9:56 PM IST (Updated: 27 March 2022 9:56 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற மேலும் 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஐகோர்ட்டு உத்தரவின்படி நேற்று முன்தினம் அதிகாரிகள் நடத்திய ஆயவில் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி விற்பனை செய்த 9 கடைகளுக்கு சீல வைக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து ஊட்டி நகராட்சியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு உள்ளதா என்று நகராட்சி ஆணையாளர் காந்திராஜ், நகர்நல அலுவலர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள்  திடீரென ஆய்வு நடத்தினர். 

ஊட்டி ஹில்பங்க் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படாதது தெரிய வந்தது. 

இதையடுத்து 13 கடைகளில் சோதனை நடத்தியதில், 5 கடைகளில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது. இதில் ஒரு கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

4 கடைகளில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து, அதனை பயன்படுத்தியவர் களுக்கு ரூ.3 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. 
அதுபோன்று ஊட்டி கமர்சியல் சாலையில் தாசில்தார் தலைமையில் வருவாய்த்துைற அதிகாரிகள் சோதனை செய்தனர். 

இதில்  2 கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். 


Next Story