தேன்கனிக்கோட்டையில் பேட்டராய சாமி கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


தேன்கனிக்கோட்டையில் பேட்டராய சாமி கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 27 March 2022 9:57 PM IST (Updated: 27 March 2022 9:57 PM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டையில் பேட்டராய சாமி கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை பேட்டராயசாமி கோவில் திருவிழா வருகிற 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்க உள்ளது. விழாவையொட்டி நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி கம்பத்திற்கு மஞ்சள் கொம்பு துணியில் சுற்றி பேட்டராய சாமி முன்பு வைத்து வேதங்கள் ஓதி கம்பத்திற்கு கட்டி, கோவில் வளாகத்தை சுற்றி எடுத்து வந்த தேரின் மீது பால் கம்பம் வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலு, அறநிலையத்துறை ஆய்வாளர் நரசிம்மமூர்த்தி, அறநிலையத்துறை செயல் அலுவலர் நடராஜன், பேரூராட்சி தலைவர் சீனிவாசன், முன்னான் தலைவர் நாகேஷ் மற்றும் கோவில் அர்ச்சகர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story