தர்மபுரி மாவட்டத்தில் இயற்கை சூழலை பாதுகாக்க 273 பல்லுயிர் மேலாண்மை குழுக்கள் அமைப்பு கலெக்டர் திவ்யதர்சினி தகவல்
தர்மபுரி மாவட்டத்தில் இயற்கை சூழலை பாதுகாக்க 273 பல்லுயிர் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று இலவச சித்த மருத்துவ முகாமில் கலெக்டர் திவ்யதர்சினி கூறினார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் இயற்கை சூழலை பாதுகாக்க 273 பல்லுயிர் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று இலவச சித்த மருத்துவ முகாமில் கலெக்டர் திவ்யதர்சினி கூறினார்.
சித்த மருத்துவ முகாம்
தர்மபுரி அரசு கலைக் கல்லூரி கலையரங்கில் 5-வது சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் சார்பில் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இலவச சித்த மருந்துகளையும், மூலிகை செடிகளையும் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மக்களின் நோயற்ற வாழ்விற்கும், ஆரோக்கியத்திற்கும் சிறப்பான மருத்துவ முறையாக விளங்குவது சித்த மருத்துவம் ஆகும். இது இயற்கை சார்ந்த மருத்துவம் என்பதால் அனைவருக்கும் உகந்த மருத்துவமாக திகழ்கின்றது. இந்த மருத்துவத்தை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
பல்லுயிர் மேலாண்மை குழுக்கள்
இயற்கை சூழலை பாதுகாக்க, பல்லுயிர் மேலாண்மை குழு அமைக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி அளவில் 273 பல்லுயிர் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பென்னாகரம், அரூர் மற்றும் காரிமங்கலம் ஆகிய 3 வட்டார அளவில் அமைக்கப்பட்டுள்ள பல்லுயிர் மேலாண்மை குழுக்கள் மாதிரி பல்லுயிர் மேலாண்மை குழுக்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த குழுக்களின் மூலம் இயற்கையை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் மீனா குமாரி, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவல்லி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, அரசு கலைக்கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன், தேசிய சித்த மருத்துவ நிறுவன பேராசிரியர்கள் ராம்மூர்த்தி, அருள்மொழி உள்பட சித்த மருத்துவர்கள், மாணவ- மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story