கலவை போலீஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி


கலவை போலீஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 27 March 2022 10:31 PM IST (Updated: 27 March 2022 10:31 PM IST)
t-max-icont-min-icon

கலவை போலீஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கலவை

வேலூர் சத்துவாச்சாரியில் சமீபத்தில் பெண் டாக்டர் ஒருவரை ஆட்டோவில் அழைத்துச் சென்று பலர் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் எதிரொலியால் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் உத்தரவுப்படி கலவை போலீஸ் சார்பில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் கலவை, மாம்பாக்கம், வாழைப்பந்தல் ஆகிய பகுதியில் இருந்து ஆட்டோ, வேன், லாரி ேபான்ற வாகன டிரைவர்களை போலீசார் அழைத்து வந்து அவர்களுக்கு கலவை போலீஸ் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மேற்கண்ட வாகனங்களில் சந்தேகப்படி யாரேனும் சென்றாலும், பெண்கள் தனியாக சென்றாலும் அவர்களுக்கு ஏதேனும் அசம்பாவித சம்பவம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்டோ டிரைவர்கள் தங்களின் வாகன ஆவணங்களை முறையாக வைத்திருக்க வேண்டும்.

 இல்லையெனில் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி அறிவுறுத்தினார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணமூர்த்தி, பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர். நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story