நின்றுகொண்டிருந்த சொகுசு பஸ்சில் 12 பவுன் நகைகள் இருந்த பை திடீர் மாயம் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு
நின்றுகொண்டிருந்த சொகுசு பஸ்சில் 12 பவுன் நகைகள் இருந்த பை திடீர் மாயம் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு
உளுந்தூர்பேட்டை
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 58). இவர் சென்னையில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சீனிவாசன் அவரது உறவினர்கள் இருவருடன் திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து தனியார் சொகுசு பஸ் மூலமாக சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். நள்ளிரவில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி என்னும் இடத்தில் வந்தபோது அங்குள்ள தனியார் உணவகத்தில் பஸ் நிறுத்தப்பட்டது. அப்போது பஸ்சில் இருந்து கீழே இறங்கி வந்த சீனிவாசன் மீண்டும் தனது இருக்கைக்கு சென்றபோது அங்கே பையில் வைத்திருந்த 12 பவுன் நகைகள் அடங்கிய சிறிய பையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். உடனே பஸ் முழுவதும் தேடி பார்த்தபோதும் நகைகள் இருந்த பையை காணவில்லை. யாரோ மர்ம நபர் அதை திருடிச்சென்று விட்டார். திருட்டு போன நகைகளின் மதிப்பு ரூ.4¼ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story