இருதரப்பினர் மோதல்; 10 பேர் காயம்


இருதரப்பினர் மோதல்; 10 பேர் காயம்
x
தினத்தந்தி 27 March 2022 11:12 PM IST (Updated: 27 March 2022 11:12 PM IST)
t-max-icont-min-icon

இருதரப்பினர் மோதியதில் 10 பேர் காயமடைந்தனா்.

திண்டிவனம், 

திண்டிவனம் ரோஷணை காலனி அண்ணா தெருவை சேர்ந்த உதயன்(22), சிவக்குமார்(25), ஹரிஹரன்(27), ரியாஸ்(22) மற்றும் 17-வயது சிறுவன் ஆகிய 5 பேரும் அங்குள்ள மைதானத்தில் நாய் ஒன்றை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். 

அப்போது ரோஷணை காலனி முனியன் தெருவை சேர்ந்த இம்மானுவேல்(22), கோபிநாத்(19), புகழேந்தி(20) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் மைதானத்தை சுற்றி வந்தபோது சிறுவனுக்கு சொந்தமான நாய் அவர்களை பார்த்து குரைத்தது.

இதனால் அவர்களை சிறுவன் நாய் உங்களை கடித்து விடப்போகிறது என எச்சரித்தார். இதற்கு 3 பேரும் நாய் எங்களை கடித்தால் சும்மா விடமாட்டோம் என்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோதல் உருவானது. இதில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

 இந்த மோதலில் காயம் அடைந்த 10 பேரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு வைத்தும் அவர்களுக்கிடையே மீண்டும் மோதல் உருவானது. 
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த ரோஷணை போலீசார் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த மோதல் சம்பவம். திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story