பக்தர்கள் பால்குட ஊர்வலமாக சென்றனர்


பக்தர்கள் பால்குட ஊர்வலமாக சென்றனர்
x
தினத்தந்தி 27 March 2022 11:29 PM IST (Updated: 27 March 2022 11:29 PM IST)
t-max-icont-min-icon

வாய்மேடு பழனியாண்டவர் கோவிலுக்கு பக்தர்கள் பால்குட ஊர்வலமாக சென்றனர்.

வாய்மேடு:-
 வாய்மேட்டில் அமைந்துள்ள பழனியாண்டவர் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக  பக்தர்கள் பால்குடம் எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். பின்னர் முருகனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிேஷகம் செய்யப்பட்டு  அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story