500 கிலோ ரேஷன் அரிசி கார் ஆட்டோ பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி, கார் ஆட்டோ பறிமுதல் செய்தனர்.
களியக்காவிளை:
களியக்காவிளையில் நேற்று அதிகாலையில் களியக்காவிளை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த ஒரு ஆட்டோவை போலீசார் மடக்கி சோதனை செய்த போது, அதில் சிறு, சிறு மூடைகளில் 200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து ரேஷன் அரிசி மற்றும் ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஆட்டோவை ஓட்டி வந்த நித்திர விளையை சேர்ந்த ஜான்ஸ் ராஜ் (வயது 38) என்பவரை கைது செய்தனர்.
இதேபோல் வேகமாக வந்த காரை தடுத்து சோதனை செய்த போது, அதில் சிறு, சிறு மூடைகளில் 300 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கார் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் காரை ஓட்டி வந்த தூத்தூரை சார்ந்த ஷாஜி (38) என்பவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசிகளை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
---
Related Tags :
Next Story