6 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது


6 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது
x
தினத்தந்தி 28 March 2022 12:21 AM IST (Updated: 28 March 2022 12:21 AM IST)
t-max-icont-min-icon

6 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது செய்யப்பட்டார்.

செக்கனூரணி, 
மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செக்கனூரணி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாயக்குருவமன்பட்டியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். இதில் பாப்பாத்தி என்பவரை பிடித்தனர். மேலும் இது சம்பந்தமாக செக்கானூரணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு  அவர் கைது செய்யப்பட்டார். 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மதுரை மாவட் டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடு வோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Next Story