ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கிருஷ்ணராயபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
கிருஷ்ணராயபுரம்,
மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி கரூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் பிள்ள பாளையம் கிராமத்தில் காட்டுவாரி மற்றும் வாய்க்கால் கரையையொட்டி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்கள் மீட்கப்பட்டன. இதேபோல் மகாதானபுரம் வடக்கு பகுதிகளில் நந்தன் கோட்டையில் வாரியிடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட இடம் மீட்கப்பட்டது.
சிவாயம் வடக்கு பகுதிகளிலும், பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி பகுதி, பஞ்சப்பட்டி ஏரியை ஒட்டியுள்ள பகுதிகள் என மொத்தம் 14.65 ஏக்கர் நிலத்தை குளித்தலை ஆர்.டி.ஓ. புஷ்பாதேவி, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் யசோதா, மண்டல துணை தாசில்தார் குணசேகரன், மாயனூர் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஸ்ரீதர், மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அகற்றினார்கள்.
Related Tags :
Next Story