இளையான்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
இளையான்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
இளையான்குடி,
இளையான்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா, மாதாந்திர உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு கோட்டாட்சியர் முத்துக்கழுவன் முன்னிலை வகித்தார்.மானாமதுரை தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. வாழ்த்துரை வழங்கினார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் சிறப்புரையாற்றி மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 155 பயனாளிகளுக்கு ரூ.61 லட்சத்து 3 ஆயிரத்து 200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 130 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, 5 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை 60 ஆயிரம், முதியோர் உதவித்தொகை 7 நபர்களுக்கு 84 ஆயிரம் ரூபாயும், விதவை உதவித் தொகையாக 13 நபர்களுக்கு ஒரு லட்சத்து 56 ஆயிரம் ரூபாய்க்கான உத்தரவு நகல்களை வழங்கினார்.
Related Tags :
Next Story