தினத்தந்தி புகார் பெட்டி


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 28 March 2022 12:52 AM IST (Updated: 28 March 2022 12:52 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கழிவறையில் தண்ணீர் வசதி ஏற்படுத்தப்படுமா? 
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தேனூரில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த சிறுவர்-சிறுமிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கழிவறையில் தண்ணீர் வராததால்  இப்பள்ளியில் படிக்கும் சிறுவர்-சிறுமிகள் சாலையோரத்தில் இயற்கை உபாதை கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் சிறிய அளவில் அமைக்கப்பட்டுள்ளதால் இரவு நேரத்தில் மது அருந்துபவர்கள் சுவர் ஏறி குதித்து பள்ளியில் அமர்ந்து மது அருந்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
 பொதுமக்கள், தேனூர், பெரம்பலூர்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி 
திருச்சி தொட்டியம் மெயின் ரோடு அருகே உள்ள அக்ரஹாரம் செல்லும் வீதியில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. மேலும் குடிநீர் சாலையில் தேங்குவதினால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உடைப்பை சரிசெய்தனர். இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 
பொதுமக்கள், தொட்டியம், திருச்சி. 

சிதிலமடைந்த கான்கிரீட் சாலை
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள மரவாபாளையம் பஸ் நிறுத்தத்திலிருந்து காவிரி ஆற்றுக்கு செல்வதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. கான்கிரீட் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் காவிரி ஆற்றுக்கு செல்லும் சாலை மிகவும் சிதிலமடைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பழுதடைந்த சாலையை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மரவாப்பாளையம், கரூர். 

குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
திருச்சி மாநகராட்சி 47-வது வார்டு இந்திரா நகரில் இருந்து வெங்கடேஸ்வராநகர், ஐஸ்வர்யா எஸ்டேட், மொராய்ஸ் கார்டன் ரன்வேநகர் செல்லும் வழியில் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் குப்பையில் உள்ள உணவு கழிவுகளை திண்பதற்காக தெருநாய்கள் சண்டையிட்டுக்கொண்டு, அந்த வழியாக செல்வோரை விரட்டி கடிக்கிறது. எனவே குப்பைகளை வீதியில் கொட்டாமல் இருக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவிக்குமார், வெங்கடேஸ்வரா நகர், திருச்சி. 

ஆபத்தான அங்கன்வாடி கட்டிடம் 
புதுக்கோட்டை மாவட்டம் , சம்பட்டிவிடுதி பஞ்சாயத்து மேலவிடுதி கிராமத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த கட்டிடம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. குழந்தைகள் கட்டிடத்தின் உள்ளே அமர்ந்து இருக்கும்போது இந்த கட்டிடம் இடிந்து விழுந்தால் உயரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ஜெயக்குமார், மேலவிடுதி, புதுக்கோட்டை. 

குண்டும், குழியுமான சாலை 
திருச்சி அரியமங்கலம் மந்தையிலிருந்து அடைக்கல மாதா கோவில் சாலை மிகவும் மோசமாக மண் சாலைபோல் காட்சி அளிக்கிறது. மேலும் சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் பள்ளத்தில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இதனை தார் சாலையாக மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சரவணன், அரியமங்கலம், திருச்சி. 


Next Story