நெல்லையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி சாவு நண்பர் படுகாயம்


நெல்லையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி சாவு நண்பர் படுகாயம்
x
தினத்தந்தி 28 March 2022 1:36 AM IST (Updated: 28 March 2022 1:36 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்

நெல்லை:
நெல்லையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
கூலித்தொழிலாளி
நெல்லை டவுன் சிவா தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 21). கூலித்தொழிலாளி. இவருடைய நண்பர் கன்னியாகுடி தெருவை சேர்ந்த செல்வராஜ் (22).
இவர்கள் 2 பேரும் நேற்று மதியம் ஒரு மோட்டார் சைக்கிளில் நெல்லை குன்னத்தூர் - நரசிங்கநல்லூர் ரோடு சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி அந்தப் பகுதியில் வந்த ஆட்டோ மீது மோதியது. அதன்பின்னரும் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி நின்றது.
பரிதாப சாவு
இதில் லட்சுமணன் உள்ளிட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே லட்சுமணன் பரிதாபமாக உயிரிழந்தார்.செல்வராஜுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story