பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது
பொது வேலை நிறுத்தத்தையொட்டி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.
சேலம்:-
பொது வேலை நிறுத்தத்தையொட்டி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.
வேலை நிறுத்த போராட்டம்
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை), நாளை (செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்கள் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து உள்ளன. இதையொட்டி மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மாவட்டத்தில் போக்குவரத்து, மருத்துவம், குடிநீர், பால், மின்சாரம் உள்ளிட்ட பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
தனியார் பஸ்கள் தடையின்றி இயக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். வேலை நிறுத்தத்தையொட்டி மாவட்டத்தில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், உதவி கலெக்டர்கள் விஷ்ணுவர்த்தினி, வேடியப்பன், சரண்யா, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story