மனைவி இறந்த துக்கத்தில் விவசாயி தற்கொலை; 2 குழந்தைகள் அனாதையானது
மைசூருவில் மனைவி இறந்த துக்கத்தில் விவசாயி தற்கொலை செய்துகொண்டார். இதனால் அவர்களின் 2 குழந்தைகள் அனாதையாகி உள்ளது
மைசூரு: மைசூருவில் மனைவி இறந்த துக்கத்தில் விவசாயி தற்கொலை செய்துகொண்டார். இதனால் அவர்களின் 2 குழந்தைகள் அனாதையாகி உள்ளது.
பெண் சாவு
மைசூரு அருகே ஹஞ்சியா கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் (வயது 45). விவசாயி. இவருடைய மனைவி காயத்ரி. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், காயத்ரி கடந்த மாதம் பி.பி. மாத்திைர சாப்பிடுவதற்கு பதிலாக வேறு மாத்திரையை சாப்பிட்டதாக தெரிகிறது.
இதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு காயத்ரி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் மனைவி இறந்ததால் மகேஷ் மனமுடைந்து காணப்பட்டார். எப்போதும் மனைவியை நினைத்து அழுது கொண்டே இருந்தார். அவருடைய உறவினர்கள் மகேசுக்கு சமாதானம் கூறியும் அவர் கேட்கவில்லை.
தற்கொலை
இந்த நிலையில் மனைவி இறந்த துக்கத்தில் இருந்த மகேஷ், தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அதன்படி, தோட்டத்துக்கு சென்ற மகேஷ் தனது சகோதரனுக்கு போன் செய்து என் மனைவியை என்னால் மறக்க முடியவில்லை. இதனால் மனைவி இருக்கும் இடத்துக்கே செல்கிறேன். குழந்தைகளை பார்த்து கொள் என்று கூறிவிட்டு செல்போனை இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மகேசின் சகோதாரா் தோட்டத்துக்கு விரைந்து வந்தார். ஆனாலும் அதற்குள் மகேஷ், பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
2 குழந்தைகள் அனாதை ஆனது
இதுபற்றிய தகவல் அறிந்ததும் மைசூரு புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் தற்கொலை செய்துகொண்ட மகேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மனைவி இறந்த துக்கத்தில் மகேஷ் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து மைசூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவி இறந்ததால் மகேஷ் தற்கொலை செய்துகொண்டதால் அவர்களது 2 குழந்தைகள் தற்போது அனாதையாகி உள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story