வேறு ஒருவருடன் மகள் ஓடியதால் தந்தை தற்கொலை


வேறு ஒருவருடன் மகள் ஓடியதால் தந்தை தற்கொலை
x
தினத்தந்தி 28 March 2022 2:40 AM IST (Updated: 28 March 2022 2:40 AM IST)
t-max-icont-min-icon

வேறு ஒருவருடன் மகள் ஓடியதால் தந்தை தற்கொலை செய்து கொண்டார்

லால்குடி
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள அன்பில் நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம்(வயது 54). விவசாயி. இவர் தனது மகளை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். ஆனால், அவரது மகள் வேறு ஒருவரோடு ஓடிப்போய் விட்டதாக கூறப்படுகிறது.
இதனால், மனஉளைச்சலில் இருந்து வந்த சண்முகம் கடந்த 26-ந் தேதி வயலுக்கு சென்று பூச்சி மருந்தை(விஷம்) குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சாவு
அங்கு சண்முகத்துக்கு மருத்துவர்கள் முதல் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சண்முகம், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இதுகுறித்து அவரது மகன் கொடுத்த புகாரின்பேரில் லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து நடத்தி விசாரணை நடத்தி வரு‌கி‌றார்.


Next Story