சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது
சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்
ஜீயபுரம்
திருச்சி சோமரசம்பேட்டை பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினர் அந்த பகுதியில் உள்ள ஜெயமோகன் என்பவரது வீட்டை ஒத்திகைக்கு எடுத்து குடியிருந்து வந்தனர். ஒத்திகை காலம் முடிந்து பணத்தை திரும்ப கேட்டதற்கு ஜெயமோகன் பணம் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். மேலும், குடியிருந்த தம்பதியின் 12 வயது மகளிடம், ஜெயமோகன் தகாத முறையில் நடக்க முயற்சி செய்ததாகவும், இதற்கு ஜெயமோகனின் மனைவி உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் தாய் ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி ஜெயமோகன் மற்றும் அவரது மனைவி ஆகிய 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெயமோகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story