தென்காசியில் போலீஸ் - பொதுமக்கள் கைப்பந்து போட்டி
தென்காசியில் போலீஸ் - பொதுமக்கள் கைப்பந்து போட்டி நடைபெற்றது
தென்காசி:
தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் முன்னிலையில், 2 நாட்களாக தென்காசி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு விளையாட்டு திடலில் காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவு கைப்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 72 அணியினர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் சிவகாமிபுரம் அணியினர் முதல் பரிசையும், தென்காசி மாவட்ட காவல்துறை அணியினர் இரண்டாம் பரிசையும், தென்காசி வெல் டேக்கர்ஸ் அணியினர் மூன்றாம் பரிசையும், வல்லம் அணியினர் நான்காம் பரிசையும் பெற்றனர். தென்காசி மாவட்ட காவல்துறை அணியின் காவலர் சார்லஸ் சிறந்த ஆட்டநாயகன் பரிசையும் பெற்றார். போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து அணியினருக்கும் பரிசு கோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story