பண்ணாரி அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
பண்ணாரி அம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
சத்தியமங்கலம்
பண்ணாரி அம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
குண்டம் விழா
சத்தியமங்கலத்தை அடுத்து உள்ளது பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில். இந்த கோவில் குண்டம் விழா கடந்த 8-ந் தேதி பூச்சாட்டு்தலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான குண்டம் விழா கடந்த 22-ந் தேதி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தார்கள்.
23-ந் தேதி புஷ்ப ரதம் கோவிலை சுற்றி வலம் வந்தது. 24-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 25-ந் தேதி திருவிளக்கு பூஜையும் நடந்தது.
குவிந்த பக்தர்கள்
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பல்வேறு பகுதியில் இருந்து குடும்பம் குடும்பமாக கார்களிலும், மோட்டார் சைக்கிளிலும் பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இதைத்தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை தரிசித்தனர்.
பின்னர் குண்டத்தில் இருக்கும் திருநீற்று மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டனர். திருமணமான பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி அங்குள்ள ஒரு கம்பத்தில் மஞ்சள் கயிற்றை கட்டினார்கள். தொடர்ந்து கோவிலில் இன்று (திங்கட்கிழமை) மறுபூஜை நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story