சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவில் கலை நிகழ்ச்சிகள்


சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவில் கலை நிகழ்ச்சிகள்
x
தினத்தந்தி 28 March 2022 3:42 AM IST (Updated: 28 March 2022 3:42 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

அரியலூர்:
அரியலூர் ஒற்றுமை திடலில் சுதந்திர திருநாள் அமுத பெருவிழா கடந்த 24-ந்தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சிகளும், பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த விளக்க கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதனை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். மேலும் மாலை நேரத்தில் கலைக்குழுவினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்குபெறும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. நேற்று அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், பரதநாட்டியம், நாடகம், தப்பாட்டம், சுதந்திர போராட்ட வீரர்களின் மாறுவேட அணிவகுப்பு நடைபெற்றது. வருகிற 31-ந்தேதி வரை விழா நடக்கிறது.

Next Story