இல்லம் தேடி கல்வி திட்ட பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை


இல்லம் தேடி கல்வி திட்ட பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை
x
தினத்தந்தி 28 March 2022 3:43 AM IST (Updated: 28 March 2022 3:43 AM IST)
t-max-icont-min-icon

இல்லம் தேடி கல்வி திட்ட பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

தா.பழூர்:
கொரோனா பேரிடர் காலத்தில் மாணவர்கள் கல்வி கற்பதில் ஏற்பட்ட பின்னடைவை ஈடுசெய்யும் வகையில் தமிழக அரசு இல்லம் தேடி கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் இல்லம் தேடி கல்வி செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு மைய ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன் தலைமையில் ஆலோசனைக் குழுவினர் பல்வேறு இடங்களில் இல்லம் தேடி கல்வி திட்ட செயல்பாடுகளை பார்வையிட்டு, பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினர். அனைத்து மையங்களிலும் செயல்பாடுகளை பற்றி கேட்டு தெரிந்து கொண்டதோடு, பள்ளி முடிந்த பிறகு மையத்துக்கு வராத மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் மையங்களுக்கு வரவழைத்து அவர்களுக்கு கல்வி திறனை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது. மையத்தில் பாடப்புத்தகங்களை மட்டும் கொண்டு கற்பிக்காமல், செயல்முறை கல்வி மூலம் மாணவர்களை உற்சாகப்படுத்தி கல்வியில் ஈடுபாட்டை அதிகரிக்க செய்வது, பெற்றோர்களுக்கு இல்லம் தேடி கல்வியின் அவசியத்தை புரிய வைத்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மைய பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் தா.பழூர் வட்டாரத்தில் சிந்தாமணி, இடங்கண்ணி, தா.பழூர், காரைக்குறிச்சி ஆகிய கிராமங்களில் செயல்பட்டு வரும் மையங்களை ஆலோசனை குழுவினர் தனித்தனியாக சென்று பார்வையிட்டனர்.

Next Story