வணிகர் நல சங்க கூட்டம்
வணிகர் நல சங்க கூட்டம் நடந்தது.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் நகர வணிகர் நல சங்க கூட்டம் கவுரவ தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், வருகிற ஏப்ரல் 4-ந் தேதி திருச்சியில் நடைபெறும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில மாநாட்டிற்கான கால்கோள் விழாவிலும், தொடர்ந்து மே 5-ந் தேதி நடைபெறும் மாநாட்டிலும் வணிகர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்வது, வேப்பந்தட்டை பஸ் நிறுத்தம் அருகே வணிகர் நல சங்க பெயர் பலகையை விரைவில் திறந்து வைப்பது, வேப்பந்தட்டையில் தராசு பயன்படுத்தும் அனைத்து வணிகர்களின் தராசுகளையும் ஒரே சமயத்தில் அதற்குரிய அதிகாரிகளை வரவழைத்து முத்திரையிடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக செயலாளர் குமார் வரவேற்றார். முடிவில் பொருளாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story