யஷ்வந்த் ஜாதவ் மீதான வருமான வரித்துறை சோதனை மாநகராட்சியில் ஊழல் நடந்ததை உறுதிப்படுத்தி உள்ளது- தேவேந்திர பட்னாவிஸ் குற்றச்சாட்டு
யஷ்வந்த் ஜாதவ் மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து வருவது மாநகராட்சியில் ஊழல் நடந்து இருப்பதை உறுதிப்படுத்துவதாக தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மும்பை,
யஷ்வந்த் ஜாதவ் மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து வருவது மாநகராட்சியில் ஊழல் நடந்து இருப்பதை உறுதிப்படுத்துவதாக தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மாதோஸ்ரீக்கு ரூ.2 கோடி
மும்பை மாநகராட்சி முன்னாள் நிலைக்குழு தலைவர் யஷ்வந்த் ஜாதவ் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் சமீபத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது.. இந்த சோதனையின் போது யஷ்வந்த் ஜாதவ் ரூ.100 கோடிக்கு மேல் சொத்துகள் வாங்கியதற்கான ஆவணங்கள் சிக்கின.
இதற்கிடையே அவர் குடிபட்வா அன்று மாதோஸ்ரீக்கு ரூ.2 கோடி ரொக்கம், ரூ.50 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரம் கொடுத்ததாக டைரியில் எழுதி வைத்து உள்ளார். பொதுவாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் வீடு தான் மாதேஸ்ரீ என அழைக்கப்படுகிறது.
இதுகுறித்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்திய போது யஷ்வந்த் ஜாதவ் அந்த பணம் தனது தாய்க்கு கொடுக்கப்பட்டது என கூறியுள்ளார்.
பட்னாவிஸ் குற்றச்சாட்டு
இந்தநிலையில் யஷ்வந்த் ஜாதவ் மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து வருவது மாநகராட்சியில் பெரிய அளவில் ஊழல் நடந்து இருப்பதை உறுதி செய்து உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்த விவகாரத்தில் வருமான வரித்துறை சரியாக விசாரணை நடத்த வேண்டும். 24 மாதத்தில் யஷ்வந்த் ஜாதவ் 38 சொத்துகளை வாங்கி உள்ளார். இதன் மூலம் கொரோனா மேலாண்மை பெயரில் மும்பை மாநகராட்சியில் ஊழல் நடந்து இருப்பது தெரியவந்து உள்ளது" என்றார்.
-------------------
Related Tags :
Next Story