புழல் ஜெயிலில் செல்போன் பறிமுதல்- கைதிகளிடம் விசாரணை
சென்னை புழல் சிறையில் கைதிகள் பயன்படுத்திவந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
புழல் தண்டனை ஜெயிலில் 850-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்த தண்டனை ஜெயிலில் நேற்று தூய்மைப் பணியாளர்கள் அறையை தூய்மை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு அறையில் இருந்த மின்பெட்டியை திறந்து சுத்தம் செய்தபோது, அதில் ஒரு செல்போனும் ஒரு சிம் கார்டும் இருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் செல்போனையும் சிம்கார்டையும் பறிமுதல் செய்து சிறைக்குள் செல்போன் எப்படி வந்தது? இதனை சிறைக்குள் பயன்படுத்தியவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Related Tags :
Next Story