மத்தியஅரசை கண்டித்து தொழிற்சங்கங்கத்தினர் சாலை மறியல்


மத்தியஅரசை கண்டித்து தொழிற்சங்கங்கத்தினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 28 March 2022 6:07 PM IST (Updated: 28 March 2022 6:07 PM IST)
t-max-icont-min-icon

மத்தியஅரசை கண்டித்து தொழிற்சங்கங்கத்தினர் சாலை மறியல்

மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசை கண்டித்து  அவினாசியில் ெதாழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டம் 
தொழிலாளர் சட்டத்தொகுப்புகளை நான்கினையும் கைவிட வேண்டும்.  மின்சார திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும்.  பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கையை முன்வைத்து  சி.ஐ.டி.யு., ஏ.டி.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., எம்.எல்.ஏப், எல்.பி.எப், எச்.எம்.எஸ்,  தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் உள்ளிட்ட சங்கத்தினர் 28 மற்றும்  29ந் தேதிகளில்  2 நாட்கள் நாடுதழுவிய வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்து இருந்தன. அதன்படி நேற்று தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 
அவினாசி தபால் நிலையம் முன்பு நேற்று தொழிற்சங்கத்தினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் சி.ஐ.டி.யு. விசைத்தறி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலத்தலைவர் முத்துசாமி, சி.ஐ.டி.யு. பனியன் சங்க மாவட்ட பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி, சி.ஐ.டி.யு. மாவட்ட குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, ராஜன், அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்ட இணைச்செயலாளர் தனலட்சுமி, வட்டாரச்செயலாளர் இந்திராணி, வட்டார பொருளாளர் மல்லிகா, ஏ.ஐ.டி.யு.சி. இசாக், ஐ.என்.டி.யு.சி.வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், கண்ணன், எம்.எல்.எப்.பெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அரசு பஸ்கள் ஓடவில்லை
 இந்த போராட்டத்தில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் பங்கெடுத்துள்ளனர். இதனால் திருப்பூர், கோவை, கோபி, சத்தியமங்கலம் பகுதிகளிலிருந்து சேவூர் பகுதிக்கு அரசு பஸ்கள் எதுவும் வரவில்லை. பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்களும் வேலைக்கு செல்பவர்களும், பள்ளிக்குச்செல்லும் மாணவ-மாணவிகளும் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டனர்.  
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் அவினாசி தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வட்டகிளை செயலாளர் கருப்பன், மாவட்ட நிர்வாகி ராமன், விஜயலட்சுமி, ஜோதி, சின்ராஜ், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் நடராஜ்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம்
பல்லடத்தில், தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி, உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக பஸ் நிலையம் முன்பு சென்றனர். இந்த நிலையில் அவர்கள் திடீரென கோவை -திருச்சி மெயின் ரோட்டில் பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த, பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன் தலைமையிலான போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். 
ஆர்ப்பாட்டத்தில் தொ.மு.ச.திருப்பூர் மண்டல பொருளாளர் சின்னக்கண்ணன், பல்லடம் தொ.மு.ச. தலைவர் ஆனந்த், செயலாளர் சிவசுப்பிரமணியன், பொருளாளர் கந்தசாமி, ஏ.ஐ.டி.யூ.சி. திருப்பூர் மாவட்டகட்டிடத் தொழிலாளர்கள் சங்க செயலாளர் மூர்த்தி, சி.பி.ஐ., ஒன்றியச் செயலாளர் சாகுல் அமீது, மாவட்ட பொருளாளர் கணேசன், சி.பி.எம்., ஒன்றிய செயலாளர் பரமசிவம், சி.ஐ.டி.யு. பழனிச்சாமி, முருகசாமி, பல்லடம் மதிமுக ஒன்றிய செயலாளர் சுப்ரமணியம், எச்.எம்.எஸ். தொழிற்சங்கம் ஆனந்த் அங்கன்வாடி ஊழியர்கள் சங்க தலைவர் பரமேஸ்வரி, மற்றும் பிருந்தா, காதர், இந்துமதி, மகுடேஸ்வரி, உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story