போலீசார் பிடித்து சென்ற தாயை மீட்டுத்தரக்கோரி 3 சகோதரிகள் கலெக்டரிடம் மனு


போலீசார் பிடித்து சென்ற  தாயை மீட்டுத்தரக்கோரி 3 சகோதரிகள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 28 March 2022 6:13 PM IST (Updated: 28 March 2022 6:13 PM IST)
t-max-icont-min-icon

போலீசார் பிடித்து சென்ற தாயை மீட்டுத்தரக்கோரி திருப்பத்தூரில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 3 சகோதரிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திருப்பத்தூர்

போலீசார் பிடித்து சென்ற தாயை மீட்டுத்தரக்கோரி திருப்பத்தூரில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 3 சகோதரிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

குறைதீர்வு நாள் கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடன்உதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி 301 பேர் மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்தில் திருப்பத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில் நாங்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கல்லூரிக்கு வந்து செல்கிறோம். மாணவர்களுக்கு அரசின் சார்பில் விடுதி வசதி ஏதும் கிடையாது. எனவே மாணவர்கள் தங்கி கல்வி பயிலும் வகையில் மாணவர்களுக்கு அரசு விடுதி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். 

தாயை மீட்டுத்தர வேண்டும்

இதே போல் வாணியம்பாடி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த சுமித்ரா, சுஜா, அஞ்சலி ஆகிய 3 சகோதரிகள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் எங்களுக்கு தந்தை கிடையாது. அம்மா பானு மட்டுமே உள்ளார். அவரை கடந்த மாதம் 6-ந் தேதி நடந்த திருவிழா சண்டையில் போலீசார் பிடித்து சென்று விட்டனர். இதனால் நாங்கள் பள்ளிக்கும் போகமுடியவில்லை. வீட்டில் தூங்கவே பயமாக இருக்கிறது. அதனால் எங்கள் அம்மாவை மீட்டுத்தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

குறைதீர்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைத்துறை சார்பில் மாற்றுதிறனாளிகளுக்கு தையல் எந்திரம், செல்போன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார், இதில்மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பானுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story