பாதாள சாக்கடையில் தவறி விழுந்த பசு மாடு- 5 மணி நேரம் போராடி மீட்பு
தாதரில் பாதாள சாக்கடையில் பசு மாடு தவறி விழுந்தது. அந்த மாட்டை 5 மணி நேரம் போராடி மீட்டனர்.
மும்பை,
தாதரில் பாதாள சாக்கடையில் பசு மாடு தவறி விழுந்தது. அந்த மாட்டை 5 மணி நேரம் போராடி மீட்டனர்.
தவறி விழுந்த மாடு
தாதர் மேற்கு, பவானி சங்கர் ரோட்டில் கபூதர்கானா அருகில் காலை 7.30 மணியளவில் பசு மாடு ஒன்று சென்று கொண்டு இருந்தது. இதில் மாடு பாதாள சாக்கடை மூடி மீது சென்ற போது, மாட்டின் எடையை தாங்க முடியாமல் மூடி உடைந்தது.
இதன் காரணமாக மாடு பாதாள சாக்கடையில் விழுந்தது. சுமார் 8 முதல் 10 அடி ஆழத்தில் விழுந்த மாடு நகர முடியாமல் திணறி கொண்டு இருந்தது.
மீட்பு
தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர், போலீசார், முன்னாள் மேயர் கிஷோரி பெட்னேக்கர், மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்கள் முதலில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சாக்கடையை அகலப்படுத்தி மாட்டை மீட்க திட்டமிட்டனர். பின்னர் அவர்கள் டிரில் மிஷினை பயன்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் சாக்கடை சுவரை இடித்த தீயணைப்பு துறையினர், கயிறு கட்டி பசு மாட்டை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மாடு பத்திரமாக மீட்கப்பட்டதால் அங்கு இருந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story