திருப்பத்தூர் மாவட்டத்தில் 95 சதவீதம் அரசு பஸ்கள் ஓடவில்லை. மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 150 பேர் கைது


திருப்பத்தூர் மாவட்டத்தில்  95 சதவீதம் அரசு பஸ்கள் ஓடவில்லை. மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 150 பேர் கைது
x
தினத்தந்தி 28 March 2022 7:42 PM IST (Updated: 28 March 2022 7:42 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் 95 சதவீதம் அரசு பஸ்கள் ஓடவில்லை. சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 95 சதவீதம் அரசு பஸ்கள் ஓடவில்லை. சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலை நிறுத்தம்

தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. இதனால் திருப்பத்தூர் மாவட்டத்தில் 95 சதவீதம் பஸ்கள் ஓடவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். வேலைநிறுத்தத்தை முன்னிட்டு முன்னாள் பொதுச் செயலாளர், கே.தேவராஜ் தலைமையில் திருப்பத்தூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. துணை பொதுச்செயலாளர் பஞ்சாட்சரம் வரவேற்றார். இணைச் செயலாளர் சரவணகுமார், வேலுமணி முன்னிலை வகித்தனர். இணை செயலாளர் நாராயணன் கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோத சட்ட தொகுப்பு நான்கையும் கைவிட வேண்டும், மின்சார சட்டத்தை கைவிட வேண்டும், உடலுழைப்பு தொழிலாளர்கள் அனைவருக்கும் விரிவான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும், மாநில நல வாரியங்களை சீர்குலைக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஓட்டுநர்கள் சங்க செயலாளர் பாண்டி மன்னன், நடத்துனர்கள் சங்க செயலாளர் தங்கராசு, பணிமனை தொழிலாளர் சங்க செயலாளர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் ரவி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் செந்தில்குமார் நன்றி கூறினார். 

மறியல்

திருப்பத்தூர் மாவட்ட சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப்., ஐ.என்.டி.யு.சி ஆகிய மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் திருப்பத்தூர் ஸ்டேட் வங்கி அருகே மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து சாலைமறியல் நடைபெற்றது. ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர்  வேணுகோபால், சி.ஐ.டி.யு. கேசவன், எல்.பி.எப். தலைவர் தேவராஜ், ஐ.என்.டி.யு.சி. தலைவர் தேவராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் கூட்டமைப்பு செயலாளர் ஜோதி, சிவசீலன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சாமிகண்ணு, நகர செயலாளர் சுந்தரேசன், மணி, முனிராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story