மக்கள் ஆதரவுடன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்- மந்திரி ஆதித்ய தாக்கரே சொல்கிறார்


படம்
x
படம்
தினத்தந்தி 28 March 2022 7:43 PM IST (Updated: 28 March 2022 7:43 PM IST)
t-max-icont-min-icon

மக்களின் ஆதரவுடன் தான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மந்திரி ஆதித்ய தாக்கரே கூறியுள்ளார்.

மும்பை, 
மக்களின் ஆதரவுடன் தான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மந்திரி ஆதித்ய தாக்கரே கூறியுள்ளார். 
 நானார் திட்டம் 
முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான முந்தைய பா.ஜனதா ஆட்சி காலத்தில் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள நானாரில் ரூ.3 லட்சம் கோடி மதிப்பில் 60 மில்லியன் மெட்ரிக் டன் திறனை கையாளும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க திட்டமிடப்பட்டது. 
உள்ளூர் கிராம மக்கள் எதிர்ப்பு, உள்ளூர் அமைப்புகளின் போராட்டம் மற்றும் பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் கைவிடப்பட்டது. 
இந்த நிலையில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், மாநில அரசு தனது மனதை மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் நானார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திட்டதிற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்தார்.
இதுகுறித்து மாநில சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆதித்ய தாக்கரேவிடம்  நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது அவர் கூறியதாவது:-
மண்ணின் மைந்தர்களுக்கு நீதி
நானார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திட்டத்தை வேறு இடத்தில் மாற்றுவத்தில் சிக்கல் உள்ளது. உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்காத மாற்று இடத்தில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இந்த திட்டத்தை உருவாக்க வேண்டும். 
இந்த விஷயத்தில் மண்ணின் மைந்தர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும் என்பதை மனதில் வைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 
இத்தகைய திட்டங்களில் மாநில அரசு முதலில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்ட பிறகே திட்ட பணிகள் தொடங்கப்படும். 
இவ்வாறு அவர் கூறினார். 
 குழப்பத்தை ஏற்படுத்த
இதேபோல சிவசேனா எம்.பி. விநாயக் ராவத் கூறுகையில், “மக்களின் மனதில் குழப்பத்தை உண்டாக்குவதற்காக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் இத்தகைய கருத்தை கூறி இருக்கலாம். 
மராட்டியத்தில் இப்படிபட்ட திட்டத்தை உருவாக்க அரசு வலியுறுத்துகிறது. ஆனால் மக்கள் எதிர்த்தால் நானாரில் திட்டம் செயல்படுத்தப்படாது” என்றார். 
  -----------------

Next Story