கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 28 March 2022 7:48 PM IST (Updated: 28 March 2022 7:48 PM IST)
t-max-icont-min-icon

தேவிகாபுரத்தில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 21). இவர் தேவிகாபுரம்-போளூர் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் கஞ்சா விற்றார்.

அந்த வழியாக ரோந்து சென்ற சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து, சதீஷ்குமாரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story