வேளாண் வணிகம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
வேளாண் வணிகம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
ஊட்டி
தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரிய பயிற்சி மையம் சார்பில், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை செயல்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம், ஊட்டி ரோஜா பூங்கா அருகே துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. முகாமுக்கு வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குனர் ஜாய்லைன் சோபியா தலைமை தாங்கி, விளைபொருட்களை சந்தைப்படுத்த அரசு மூலம் எடுத்து வரப்படும் நடவடிக்கைகள் மற்றும் நீலகிரி விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த வேளாண் சந்தை அமைப்பது குறித்து விளக்கினார்.
வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமாலா இயற்கை விவசாயம் மற்றும் விற்பனை, உயிர் உரம், உயிர் உர கட்டுப்பாடு உற்பத்தி குறித்து எடுத்துரைத்தார். வேளாண்மை அலுவலர் கலைவாணி வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம் தொடர்பான செயல்பாடுகள், சந்தைப்படுத்தலில் வெற்றியடைந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் குறித்து விளக்கினர். மேலும் காய்கறி மற்றும் பழங்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கிறது. ஒரு மாவட்டத்துக்கு ஒரு விளைபொருள் திட்டம், மின்னணு தேசிய வேளாண் சந்தை, சேமிப்பு கிடங்குகள், பொருளீட்டுக் கடன், உழவர் நலதிட்டம், பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு, குறு உற்பத்தி நிறுவனங்களுக்கான திட்டங்கள் குறித்து விளக்கி கூறப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story