தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
ஊட்டி
நீலகிரி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், தீ விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் விழிப்புணர்வாக இருப்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி, ஊட்டி அருகே முத்தோரை பாலாடாவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரிகளில் தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு கருவிகளை கொண்டு அணைப்பது, தீயணைப்பு கருவிகளை பயன்படுத்துவது, எண்ணெய் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் தீ விபத்து போன்றவற்றை அணைக்கும் முறைகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் இடி-மின்னலின் போது தீ விபத்துக்களை தவிர்ப்பது, மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலியர்கள், ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story