அத்திப்பேடு ஊராட்சி மன்றத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்
பொன்னேரி அருகே அத்திப்பேடு ஊராட்சி மன்றத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு சோழவரம் ஒன்றிய குழு தலைவர் ராஜாத்திசெல்வசேகரன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் அனைவரையும் வரவேற்றார். பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் பங்கேற்று முகாமை தொடங்கி வைத்து சிகிச்சை பெற்றார். இம்முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை உட்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் ஒன்றிய கவுன்சிலர் சாரதாரவி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
இதையடுத்து அத்திபேடு ஊராட்சியில் குறைந்த அழுத்த மின்சாரத்தால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்ததையடுத்து தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் பஞ்செட்டி துணை மின் நிலையத்தின் சார்பாக ரூ.3 லட்சம் மதிப்பில் 100 கிலோவாட் புதிய டிரான்ஸ்பார்மரை நிறுவியது இதனை பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் இயக்கி வைத்தார். இதில் சோழவரம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வசேகரன், மாவட்ட கவுன்சிலர் தேவதயாளன், உதவி பொறியாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story