திருத்தணி முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள்
திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் திரண்டனர்.
முருகன் கோவில்
திருத்தணியில் முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான கோவில் மலைமேல் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம்.
பக்தர்கள் திரண்டனர்
இந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் ஆந்திரா, கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் பொதுவழியில், பக்தர்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். அதே போல் ரூ.100 மற்றும் ரூ.150 சிறப்பு தரிசன கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒரு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். மூலவருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
Related Tags :
Next Story